Saturday, August 16, 2008

டேட்டா எண்ட்டரி வேலை # 2

எமது முந்தைய பதிவான டேட்டா எண்ட்டரி வேலை # 1-க்கு பின்னூட்டம் மூலம் தொடர்பு கொண்ட அனைவருக்கும் நன்றி.


ஒரு சிலர் மேக்ரோ என்றால் என்ன என்று கற்றுக் கொடுங்கள், செய்து தருகிறோம் என்று கூறியிருந்தனர்.

பெயர் வெளியிட விரும்பாத பிரபல தமிழ்ப் பதிவர் ஒருவர், Excel, Word  போன்றவைகளே ஒழுங்காக தெரியாது என்றும், அவற்றைப் பற்றி தெரிவித்து விட்டு இது போன்ற வேலைகளை போஸ்ட் செய்யலாம் என்றும் அட்வைஸித்திருந்தார்.

எல்லா ஆலோசனைகளுக்கும் நன்றி. எதேல்லாம் எனக்கு தெரிகிறதோ, அதையெல்லாம் ஒவ்வொன்றாக தெரிவிக்கிறேன்.


இப்போது அடுத்த டேட்டா எண்ட்டரி வேலை இதோ.. (இது போன்ற டேட்டா எண்ட்டரி வேலைகள் தவிர அவ்வப்போது பொதுவான டேட்டா எண்ட்டரி விஷயங்கள் குறித்தும் வழக்கமான பதிவுகள் கண்டிப்பாக வெளிவரும்!)

****

superpages.com, yellowpages.com, yell.com.uk போன்ற வலைத்தளங்களை பார்த்திருக்கிறீர்கள் தானே?


அவற்றிலிருந்து தகவல்களை இறக்குமதி செய்து Excel / Access கோப்புகளாக தருவதற்கான மென்பொருள் எழுதத் தெரியுமா உங்களுக்கு?

உதாரணத்திற்கு தான் மேற்கண்ட வலைத்தளங்கள் தந்திருக்கிறேன். இதே போன்ற பல்லாயிரக்கணக்கான வலைத் தளங்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து மார்க்கெட்டிங் உபயோகத்திற்காக பலரும் தகவல்களை எடுத்து தரச் சொல்லி கேட்பார்கள்.


முன் அனுபவம் எதுவும் இருக்கிறதா?

பின்னூட்டம் மூலம் தொடர்பு கொள்ளுங்களேன்.

***
இப்போதைக்கு இங்கே பிரசுரிக்கும் வேலைகள் குறித்து உங்களுக்கு பரிட்சயம் இருந்தால் மட்டும் பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.


டேட்டா எண்ட்டரி வேலைகள் குறித்து சந்தேகம் எதுவும் இருந்தால் சம்பந்தப்பட்ட பதிவுகளில் பின்னூட்டமிடுங்கள்.

மற்றபடி resume அனுப்புவது, தொலைபேசி, மின்னஞ்சல் முகவரிகளை தந்து தொடர்பு கொள்ளச் சொல்வது போன்றவைகளை தற்போதைக்கு தயவு செய்து தவிர்க்கவும்.

ஒவ்வொரு வேலை வரும் போதும் அது குறித்து இங்கே தெரியப்படுத்தும் போது அது சம்பந்தமாக பின்னூட்டமிடவும்.

நன்றி.

8 comments:

  • Anonymous

    It is also a kind of spamming to do these kind of extractions. Don't you know?

  • Anonymous

    Is this opening still available?

  • DataEntry

    Anonymous,

    I'll discuss on this in the near future about your question.

    ***

    Yes, Seenivas, these kind of openings are available always. :)

  • ஜோசப் பால்ராஜ்

    டேட்டா என்ட்ரி வேலை தர்றோம்னு சொல்ற நிறைய பேரு முதல்ல கொஞ்சம் பணம் கட்டுங்கன்னு சொல்றாங்களே, நீங்க தர்ற வேலைக்கு பணம் கட்டணுமா?

    நீங்கள் தற்போது கேட்டிருக்கும் மென்போருளை எந்த ப்ரோக்ராமிங் லாங்குவேஜில் எழுத வேண்டும்?

    முன் அனுபவம் இருந்தால் மட்டும்தான் வேலை தருவீர்களா? இல்லை எனக்கு தெரியும் என்றாலும் வேலை தருவீர்களா?

  • DataEntry

    நன்றி ஜோசப் பால்ராஜ் அவர்களே.

    இல்லை. முன்பே தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.

    வேலை பார்ப்பது நீங்கள். பிறகு எதற்காக நீங்கள் பணமும் தர வேண்டும்?

    அப்படி கேட்பார்களேயானால் அது நூறு சதம் ஏமாற்று வேலையாகத் தான் இருக்கும்.

    இங்கே நான் தொடர்ந்து குறிப்பிடப்போகும் வேலைகளை முடிப்பவர்களுக்கு வேலை நன்றாக இருந்தால் நாங்கள் பணம் தருவோம்.

    டேட்டா எண்ட்டரி வேலை 1-ல் நமது தமிழ் வலைப்பதிவைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத நண்பரொருவர் எக்ஸெல் மேக்ரோ ஒன்றை சிறப்பாக தயார் செய்து அதற்குண்டான பணத்தையும் பெற்றுக் கொண்டார்.
    முன் அனுபவம் எல்லாம் தேவையில்லை. குறிப்பிட்ட வேலைகளை செய்யத் தெரிந்திருந்தால் போதும். உதாரணத்திற்கு ஸ்கிரிப்ட் எழுத கேட்கும் போது, ஸ்கிரிப்ட் எழுதுவது எப்படி என்று கேட்பவர்களுக்கு அந்த வேலை ஒத்து வராது. அவ்ர்களுக்குத் தகுந்தாற்போன்ற வேலை விரைவில் வரும்.

    தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தினால் தொடர்பு கொள்வோம்.

    எந்த லாங்குவேஜ் என்பது உங்களது விருப்பம். எங்களுக்கு வேண்டியது அந்த புரோகிராம் விண்டோஸில் ஓட வேண்டும். சோர்ஸ் கோடெல்லாம் தேவையில்லை.

  • Anonymous

    what kind of information extract from the website. Because each website are like links, pages etc., Please can you clear what kind of information to be extract from the corresponding website....

  • manjoorraja

    தமிழ், மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சும் வேலை இருந்தால் சொல்லவும் பல நண்பர்களுக்கு உதவும்.

    மேலும் வோர்ட் நிரலில் தட்டச்சு மற்றும் ஃபார்மேட் செய்து தரவும் நண்பர்கள் தயாராக இருக்கிறார்கள்.

  • puduvaisiva

    Hi Data entry

    you making good thing to teach how to caugh fish

    and many of our people only basic knowledge so if you have time means teach something and also give any tutorial link that ones if its video is good..

    I wish you your service write more I will join soon..

    Puduvai siva.

Post a Comment

பின்னூட்டமிடும் போது உங்கள் பின்னூட்டத் தகவல்களை பொதுவில் வெளியிட வேண்டாம் என்றால் அதை முதல் வரியிலேயே, "பிரசுரத்திற்கு இல்லை" என்று தெரியப்படுத்திவிட்டு பின்னூட்டமிடவும்.