Tuesday, August 12, 2008

என்ன என்ன தேவை?

வீட்டிலிருந்தபடியே கணினி மூலம் சம்பாதிக்க பின் வருவன தேவை :

(1) கணினி (இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஓசியில் கிடைத்தால் உபயோகித்துக் கொள்ளலாம். அல்லது பிரவுசிங் செண்டரிலிருந்து சிறிது காலத்திற்கு உபயோகித்துக் கொள்ளலாம்!)

(2) மின்சாரம் (எங்கிருந்து கணினியைப் பயன்படுத்தினாலும் மின்சாரம் கண்டிப்பாக தேவை. இதற்கு நாம் வேறு வழியே இல்லாமல் ஆற்காட்டாரை தான் நம்பியாக வேன்டும்! இல்லாவிட்டால் ஜெனரேட்டரோ, யூ.எஸ்.பி.யோ வாங்கி வைத்துக் கொள்ளவும்.

(3) கம்ப்யூட்டரில் வேலை செய்ய அதை செயல் படுத்த கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும். கம்ப்யூட்டரை switch on, off எப்படி என்று தெரியாத ஆசாமியா நீங்கள்? தப்பேயில்லை, அதை முதலில் கற்றுக் கொள்ள முயலுங்கள்.

(4) இணைய தளத்தில் மேயத் தெரிந்திருக்க வேண்டிய அடிப்படை தெரிந்திருக்க வேன்டும்.

(5) Excel, MS Word போன்றவை இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

(6) எல்லாவற்றுக்கும் மேலாக கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும்.

(7) மின்னஞ்சல் முகவரி வேண்டும்.

(8) ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகள் ஓரளவிற்கு நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்.

(9) மற்றபடி ஜாவா, ஆரக்கிள், இணைய தள வடிவமைப்பு, அது இதுவென்று வெளுத்து வாங்கும் ஆசாமியா நீங்கள்? அப்படியெனில் இன்னும் ஓரிரெண்டு பதிவுகள் வரை காத்திருங்கள்.

இதையெல்லாம் ரெடியாக்கி வைத்துக் கொண்டு அடுத்த பதிவுக்கு வாருங்களேன்.

7 comments:

  • Anonymous

    Why did you bring Arcot Veerasamy in to Data Entry issue?

  • Anonymous

    கேட்ட கேள்விக்கு பதில் இன்னும் வரவில்லை. இங்கே ஆற்காடு வீராசாமியை ஏன் அநாவசியமாக இழுத்தீர்கள்?

  • DataEntry

    அட போங்கப்பா. வெறுமன டேட்டா எண்ட்டரின்னு சொல்லிகிட்டே இருந்தா 'ரா'வா இருக்குமேன்னு ஒரு பேச்சுக்கு அவர் பேர இழுத்தா, மேட்டரை விட்டுட்டு ஆற்காட்டாரையே புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்களே?

    அவருக்கு இங்கே இவ்வளவு பெரிய ரசிகர் மன்றம் இருக்கும்ன்னு நான் நினைக்கல.

    (ஊருக்குள்ள வந்து அவரோட ரசிகர்ன்னு சொல்லிடாதீங்க, பின்னி பெடல் எடுத்திடுவாங்க மக்கள்)

  • Sen22

    எனக்கு விருப்பம் இருக்கு... நானும் கலந்துக்கிறேன்...

  • pudugaithendral

    nanum ready.

  • கூடுதுறை

    எடுத்தவுடன் இவ்வளவு டெபாசிட் கட்டவேண்டும் என கேட்கமாட்டிர்களே/

  • DataEntry

    நண்பர்களே, ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். இங்கே டேட்டா எண்ட்டரி என்றால் என்ன, எவ்விதமாக அதில் ஏமாற்ற முயலுவார்கள், அவற்றிலிருந்து தப்பித்து எப்படியெல்லாம் முறையான வேலைகளை பெறுவது என்று ஒன்றன் பின் ஒன்றாக என்னால் முடிந்த அளவிற்கு விளக்க உள்ளேன்.

    இங்கே மற்றபடி நானே உங்களுக்கு டேட்டா எண்ட்டரி வேலைகளை அள்ளித் தருவேன் என்றொ, அதற்கு டெபாசிட் கட்ட வேண்டும் என்றோ சொல்லவில்லை.

    ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். டெபாசிட் கட்டி டேட்டா எண்ட்டரி வேலைகளை பெறுவதும் ஒரு வகையில் ஏமாற்று வேலை தான்.

    இப்படி எனக்கு தெரிந்ததை எடுத்துச் சொல்லும் போது உங்களில் ஒரு சிலர் அதை கற்கும் ஆர்வத்தை வைத்து எனக்கு வரும் வேலைகளில் ஒரு சிலவற்றை பின்னாளில் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன். அப்பொழுதும் கூட அதற்கு நீங்கள் எனக்கு காசு கொடுக்க வேண்டாம். முறையாக முடிக்கும் வேலைக்கு நான் தருகிறேன். கவலைப் பட வேண்டாம்.

    மற்றபடி நீங்களும், உங்கள் நண்பர்களும் இதில் சேருங்கள். ஆளுக்கு ஐயாயிரம் கட்டுங்கள் என்ற கதையெல்லாம் இங்கே கண்டிப்பாக கிடையாது.

Post a Comment

பின்னூட்டமிடும் போது உங்கள் பின்னூட்டத் தகவல்களை பொதுவில் வெளியிட வேண்டாம் என்றால் அதை முதல் வரியிலேயே, "பிரசுரத்திற்கு இல்லை" என்று தெரியப்படுத்திவிட்டு பின்னூட்டமிடவும்.