Wednesday, February 10, 2010

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

அதான் தெரியுமே என்கிறீர்களா?

தெரியும் தான்.. ஆனால் அதை பின்பற்றுகிறோமா?

கணினி உலகில் இந்த 'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு' என்ற தாராக மந்திரத்தை செயல்படுத்தினால் அனைவருக்குமே நிச்சயம் பிரகாசமான எதிர்காலம் உண்டு.



Y2K பிரச்னையின் போது அமெரிக்கா சென்ற இந்தியர்களில் நம் அண்டை மாநிலமான ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம் தெரியுமா?
கம்ப்யூட்டரை சுவிட்ச் ஆன் செய்ய மட்டுமே தெரிந்தவராக இருந்தால் கூட தனக்கு தெரிந்தவன் என்ற காரணத்தினால் கூடவே அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்ற ஆந்திரர்கள் உண்டு.

நம்ம தமிழ் மக்கள்?

சரி, மேட்டருக்கு வருவோம்.
டேட்டா எண்ட்டரி வேலையில் வெற்றி பெற தனியாக கஷ்டப்படுவதை விட நான்கைந்து பேர்களாக சேர்ந்து திட்டமிட்டு உழைத்தால் கண்டிப்பாக பெரும் வெற்றி பெறலாம்.

இப்படி சேருவதால் ஒருவரின் மூளை மற்றவருக்கும் பயன்படும். ஒருவர் மட்டுமே முடிக்க இயலாத வேலைகளை நான்கைந்து பேர்களாகச் சேர்ந்து செய்து விரைவில் முடிக்கலாம். இதன் மூலம் வேலை தருபவர் சூப்பர் வேகத்தில் வேலை முடிந்ததே என்று மகிழ்வார்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட கஸ்டமரை நான்கைந்து பேர்களில் யார் முதலில் தொடர்பு கொண்டார்களோ அவர்கள் பெயரில் மட்டுமே தொடர்ந்து தொடர்பு கொள்ள வேண்டும்.

இதற்காக ஒரு பொதுப்பெயர் வைத்துக் கொண்டு அல்லது டீம்-லீடரின் பெயரிலோ அனைவரையும் தொடர்பு கொள்ளலாம். இதனால் தேவையற்ற குழப்பங்கள் தவிர்க்கலாம்.

சரி.. நான்கைந்து பேர் ரெடியா?

அடுத்து என்ன செய்ய வேண்டும்..

அடுத்த பதிவில் பார்க்கலாம்...

Tuesday, February 9, 2010

மீண்டும்...

ஸாரி.. நடுவில் பணி நிமித்தம் பிஸியாக இருந்ததால் தொடர்ந்து எழுத இயலவில்லை.




இப்போது ஓரளவிற்கு நேரம் கிடைக்கிறது.



இனி தொடருவோம்.
பின்னூட்டமிடும் போது உங்கள் பின்னூட்டத் தகவல்களை பொதுவில் வெளியிட வேண்டாம் என்றால் அதை முதல் வரியிலேயே, "பிரசுரத்திற்கு இல்லை" என்று தெரியப்படுத்திவிட்டு பின்னூட்டமிடவும்.