Thursday, August 14, 2008

டேட்டா எண்ட்டரி வேலை #1

டேட்டா எண்ட்டரி வேலைகளின் அடிப்படை என்ன என்பது குறித்து கொஞ்சம் கொஞ்சமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


ஆனால் ஏற்கனவே இது குறித்து கொஞ்சமாவது தெரிந்த சிலர், 'சீக்கிரமா மேட்டருக்கு வாங்க' என்று பின்னூட்டம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

சரி, நீங்கள் Excelலில் கடை தேர்ந்தவரா? Excel Macro குறித்து நன்கு தெரியுமா?

உங்களுக்கு ஓரு சில வேலைகள் காத்திருக்கின்றன. (கவலை வேண்டாம், செய்யும் வேலைக்கு சன்மானம் தரப்படும்!)

எக்ஸெல் மேக்ரோ எதுவும் நீங்கள் வடிவமைத்திருந்தால் screen shot அல்லது demo அனுப்பவும். ( mediafire.com என்ற இணைய தளத்தில் அப்லோடு செய்து அதன் லிங்க்கை அனுப்பலாம்)

பின்னூட்டத்தில் அது குறித்து தெரிவிக்கவும். கூடவே உங்கள் பின்னூட்டத்தை பிரசுரிக்கலாமா வேண்டாமா என்பது குறித்தும் தெரியப்படுத்தவும்.


மற்ற விபரங்கள் விரைவில்...

13 comments:

 • அப்பாவி ஆறுமுகம்

  மேக்ரோன்னா என்ன?

 • DataEntry

  அப்பாவி ஆறுமுகம், (பேரு நல்லா இருக்கே!)

  நல்ல வேலை, எக்ஸெல்ன்னா என்னன்னு கேட்காம விட்டீங்களே.

  ஐயா, அதெல்லாம் பிறகு விளக்க முயலுகிறேன். தப்பா எடுத்துக்காதீங்க. இப்போதைக்கு இது 'மேக்ரோ' பத்தி தெரிஞ்சவங்களுக்கான ப்ராஜெக்ட்.

 • GoogleDasan

  கூகுள் விளம்பரங்களை தமிழ் பதிவுகளில் எப்படி போடுவது? தமிழ் பதிவுகளில் போடக்கூடாது என்று சொல்கிறார்களே?

 • DataEntry

  கோகுல்தாசன் என்கிற பெயரை நீங்க கூகுள்தாசன் அப்படீன்னு மாத்தியிருக்கிறது, நைஸ்.

  தமிழ் பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள் போடக்கூடாதான்றதுக்கு பதில் நிஜமா எனக்கு தெரியாது.

  ஆனா நீங்க ஒரு ஆங்கில இணைய தளமோ, அல்லது ஆங்கில வலைப்பதிவோ வெச்சிருந்தா அங்கே கூகுள் விளம்பரத்தை சேர்க்கலாம். அதே adsense கோடை இங்கேயும் பயன்படுத்திக்குங்க. சிம்பிள்.

 • Anonymous

  கூகுள் adwords பத்தி எழுதுங்க.

  என்னோட கஸ்ட்மர்களின் வலைத்தளங்களுக்கு அங்கே விளம்பரம் தர்றேன். ஆனா என்னோட நண்பன் ஒருத்தன் சொன்னான், வெளியில கூகுள் ஆட்வேர்ட்ஸ் விளம்பர வவுச்சர்கள் சல்லீசா கிடைக்கும் அப்படீன்னு.

  அப்படியா?

 • DataEntry

  இதெல்லாம் டேட்டா எண்ட்டரி தலைப்பின் கீழ் வருமான்னு தெரியல.

  இருந்தாலும் சொல்றேன்.

  ஆமாம், adwords voucher தயார் பண்ணி ஜப்தி ரேட்டிலே விக்குறதையே முழு நேர தொழிலா ரொம்ப பேரு செஞ்சுகிட்டு இருக்காங்க.

  உதாரணத்திற்கு, 100 டாலர் பொருமானமுள்ள வவுச்சர் 15 டாலர், 20 டாலருக்கெல்லாம் கூட கிடைக்குது. அதாவது 15 டாலருக்கு இந்த வவுச்சரை வாங்கி நாம நூறு டாலர் பொறுமானமுள்ள விளம்பரங்களை கூகுளில் தரலாம். சூப்பர் இல்லை? இது தெரியாம நூறு டாலர் விளம்பரத்துக்கு நூறு டாலர் அப்படியே கூகுளுக்கு காசு கட்டுறவங்களை பாத்தாதான் பாவமா இருக்குது.

  சரி, அடுத்த பதிவை இது பத்தி எழுதிடலாமா?

 • Anonymous

  Good.

  Keep it up.

 • JS Page

  Hi,
  I have basic knowledge about macros in excel, I have used it for some of the repetitive tasks which I perform in the office work. I would like to know about the work(involves macro) which you mentioned in this post. please let me know.

  Best Regards,
  Jagan

 • DataEntry

  I need a macro to get the input from an excel file a huge list of property addresses and get their values from zillow.com

  I know zillow has got API and so creating a macro is an easy one.

  Anyone interested? If so, quote your price for this in the comment feedback along with your email address. Paypal payment or ICICI deposit.

 • Anonymous

  you cant put google ads in tamil websites... read google adsense TOS again

 • DataEntry

  நன்றி Anonymous , மேலே எனது பின்னூட்டத்தை படிக்கவும். அது குறித்து தெரியவில்லை என்று சொன்னேன்.

  ஆனால் எந்தவொரு தமிழ் இணையதளத்தை எடுத்தாலும் அதில் கூகுள் விளம்பரம் இல்லாமல் இல்லை.

  எப்படியாவது விளம்பரதாரர்களிடம்ருந்து காசு பார்த்தால் சரி என்று கூகுளே கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறது என்று நினைக்கிறேன்.

 • Anonymous

  தமிழ் இணைய தளங்களில் கூகுள் விளம்பரங்களை தெரியப்படுத்தக்கூடாது என்பது அங்கே தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். இது கூட தெரியாமல், நீங்கள் டேட்டா எண்ட்டரி குறித்து எல்லாருக்கும் கற்றுக் கொடுக்க வந்திருக்கீறீர்கள். பேஷ்.

 • DataEntry

  என்ன சொல்ல வருகிறீர்கள் , கூகுள் விளம்பரங்களுக்கும் டேட்டா எண்ட்டரி குறித்து கற்றுத் தர முயலுவதற்கும் என்ன சம்பந்தம்? அது சரி, நீங்கள் ஏன் சம்பந்தமேயில்லாமல் இவ்வளவு கோபப்படுகிறீர்கள் - அதுவும் பெயரைச் சொல்லாமல்.

Post a Comment

பின்னூட்டமிடும் போது உங்கள் பின்னூட்டத் தகவல்களை பொதுவில் வெளியிட வேண்டாம் என்றால் அதை முதல் வரியிலேயே, "பிரசுரத்திற்கு இல்லை" என்று தெரியப்படுத்திவிட்டு பின்னூட்டமிடவும்.