Thursday, August 14, 2008

உஷாருய்யா உஷாரு!

மனுஷன் நேரிலே நிக்கும் போதே கமுக்கமா ஏமாத்துறானுக. கணினி மூலமா ஏமாத்துறதா கஷ்டம்?

கிரெடிட் கார்டுல எப்படி எல்லாம் ஏமாத்த முடியும்னு ஓரளவுக்கு எல்லாருக்கும் தெரியும்னு நினைக்கிறேன்.

கடலை மிட்டாய் ரெண்டு ரூபாய்க்கு வாங்கிட்டு ஸ்டைலா கிரெடிட் கார்டை எடுத்து நீட்டுற ஆசாமியா நீங்க? அடுத்த தபா அப்படி நீட்டும் போது கிரெடிட் கார்டு மேல ஒரு கண்ணை வையுங்க. (கடலை மிட்டாயை அப்புறமா சாப்பிட்டுக்கலாம்)

உங்க கிரெடிட் கார்டை ஒரு மிஷினிலே வெச்சு ஒரு இழுப்பு இழுத்தா அந்த மேக்னெட்டிக் பார்ட்டிலே இருக்கிற அத்தனை டேட்டாவும் அப்படியே அந்த தம்மாத்தூண்டு மெஷினோட இணைக்கப்பட்ட கம்ப்யூட்டருக்கு ஓடிப் போயிடும். அப்புறம் என்ன, அதே மாதிரியே 'முன்சாமி விலங்கியல் மூன்றாமாண்டு' அப்படீன்னு 'டுபாக்கூர் வங்கி' வழங்கின கிரெடிட் கார்டை எடுத்துக்கிட்டு கடலை மிட்டாய்க்கடை அண்ணாத்தே இங்கே இருந்து மின்னஞ்சலில் கார்டு விபரங்களை தட்டி விட்டுடுவாரு. அதை எடுத்துக்கிட்டு அங்கே நம்மாளு கடைக்கு கெளம்பிடுவாரு. அடுத்த மாசம் பில் வரும் போது தான் உங்களுக்கு ஐயையோன்னு இருக்கும்.


"ஐயா, நான் இது வரைக்கும் பக்கத்திலே இருக்கிற கர்நாடகாவுக்கு கூட போனதில்ல. எங்கேயோ இருக்கிற கனடாவில என்னோட கார்டை எப்படிய்யா யூஸ் பண்ணியிருக்க முடியும்?" அப்படீன்னு உங்க கிரெடிட் கார்டு வங்கியில கேள்வி கேட்டு அவங்க விசாரணை நடத்தி, முடிவு உங்களுக்கு சாதகமா வர்றத்துக்குள்ள டங்கு டணாலாகிடுமில்ல?
இந்த பிரச்னையினால கிரெடிட் கார்டும் வேணாம், ஒண்ணும் வேணாம்னு கமுக்கமா இருக்கிறவங்க ரொம்ப பேரு. (ஹும் கிரெடிட் கார்டு இல்லாம நிம்மதியான வாழ்க்கை! கொடுத்து வெச்சவங்கப்பா!)

இதுவே, இணைய தளங்களுக்கு போய் உங்க கிரெடிட் கார்டு நம்பரை கொடுத்து பொருள் வாங்கணும்னா அவங்க ரொம்ப சுலபமா அதை எடுத்து அவங்க பங்குக்கு உபயோகப்படுத்திட்டாங்கன்னா என்ன ஆவுறது?

இதுக்கு தான் virtual credit card என்றெல்லாம் இருக்கு. இருந்தாலும் அதிலயும் கூட நிறைய ரிஸ்க் எல்லாம் இருக்கு.


(அது சரி, நீங்க உங்க ஆபிஸ் கம்ப்யூட்டரிலயோ, பிரவுசிங் செண்டர் கம்ப்யூட்டரிலயோ உங்க கிரெடிட் கார்டு number டைப் பண்றிங்க, அங்க உங்க மேலதிகாரியோ, பிரவுசிங் செண்டர் உரிமையாளரோ Key logger சாப்டுவேர் வெச்சிருந்தா நீங்க டைப் பண்ணுர ஒவ்வொரு எழுத்தும் அவங்களுக்கு தெரிஞ்சிடுமே! இது குறித்து பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்!)
பே-பால் மூலமா பொருள் வாங்கணும்னா உங்க கிரெடிட் கார்டு விபரங்கள் உங்களுக்கு பொருள் விற்பவருக்கு தெரியவே தெரியாது.

ஆனா, தில்லாலங்கடிகள் பே-பாலிலும் பயங்கர தில்லு முல்லு பண்ணுறானுங்க.

நீங்க ஒரு பே-பால் கணக்கு வெச்சிருக்கீங்கன்னு வெச்சுப்போம். (தொறந்திட்டீங்க தானே?). அதில குருவி (விஜய் படம் அல்ல) சேக்குற மாதிரி ஒரு ஆயிரம் டாலர் இருக்குன்னு வெச்சுப்போம்.

இப்போ உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும்.


அன்பார்ந்த ஏமாளியே,



உங்க PAYPALஅக்கவுண்ட்டை எவனோ லவுட்ட பாக்குறான். அதனால உடனடியா கீழே உள்ள லிங்க்கை சொடுக்கி உங்க பாஸ்வேர்டை கொடுத்திட்டு போங்க.
         
- இந்த மெயிலை பார்த்த உடனே, மேற்படி லிங்கை க்ளிக்கி, அங்க உங்க பேபால் யூசர் நேம், பாஸ்வேர்டு கொடுத்திட்டு உட்காந்தீங்கன்னா.......

.........
.........


உட்காந்துக்கிட்டே இருக்க வேண்டியது தான்.


இந்நேரம் உங்க கணக்கில இருந்த 1000 டாலரை மேற்படியான் தூக்கிட்டு ஓடியே போயிருப்பான். போற போக்கில உங்க PAYPAL  பாஸ்வேர்டு, மின்னஞ்சல் முகவரிகளையும் மாத்திட்டு போயே போயிடுவான்.


தலையில எட்டு மொழ வேட்டிய போட்டுக்கிட்டு மோட்டுவலையை பாத்துக்கிட்டு உட்கார்ந்திருக்க வேண்டியது தான்.


கோவிந்தோ... கோவிந்தோ!


எப்படீன்னா, மேற்படியானுங்க PAYPAL வெப்சைட் மாதிரியே ஒரு டுபாக்கூர் வெப்சைட் தயார் பண்ணி அங்க உங்கள வர்ற மாதிரி ஈ-மெயில் அனுப்பிடுவானுங்க. நீங்களும் PAYPAL அப்படீன்னு லோகோ எல்லாம் பாத்துட்டு, "அடடே, நம்ம PAYPALகாரன் தான்" அப்படீன்னு பாஸ்வேர்டு டைப் பண்ணுவீங்க. அம்புட்டு தான். பாஸ்வேர்டு மேற்படியானுக்கு லட்டு மாதிரி போயிடும்.


அப்புறம் என்ன? அவன் காட்டுல சுனாமி தான்!


அதனால இப்படி ஒரு email வந்தா, அவன் அனுப்புற லிங்க்க்கு பதிலா, புதிசா நீங்களே http://www.paypal.com/ அப்படீன்னு டைப் பண்ணிட்டு போங்க.


அப்புறம் PAYPAL அனுப்பின அந்த ஈ-மெயிலிலே உங்களோட முழு பெயரும் இருக்கும். மேற்படியானுங்க அனுப்புர மெயிலிலே அப்படி இருக்காது.


PAYPAL வெப்சைட் https:// அப்படீன்னு இருக்கும். இவனுங்க கொடுக்கிற லிங்க் வெறும் http:// தான்.

இதே மாதிரி உங்க email முகவரி, வங்கிக் கணக்கு ஆன்லைன் எல்லாத்தையும் பாஸ்வேர்டு மாத்தச் சொல்லி மின்னஞ்சல் அனுப்பினா அவனுங்க அனுப்புற லிங்கை கிளிக்கிடவே கிளிக்கிடாதீங்க.

10 comments:

  • Anonymous

    எனக்கென்னவோ உங்க மேல நம்பிக்கையே வர மாட்டேங்கிரது.

    - டேட்டா எண்ரி வெப்சைட்டுகளில் எக்கச்சக்கமாக இழந்தவன்

  • Anonymous

    Nice Posts. Thanks.

  • DataEntry

    வர்றவங்க எல்லாம் அப்படியே பாத்துட்டு அப்பீட் ஆனா என்ன அர்த்தம்? வந்தது தான் வந்தீங்க ஒரு கருத்து சொல்லிட்டு போலாமில்லியா?

  • Anonymous

    நீன்க சொல்லுற கீ லாகர் சாப்ருவேர் எங்க கிடைக்கும்? ஹிஹி

  • Anonymous

    "ஒரு கருத்து"

  • DataEntry

    //"ஒரு கருத்து"//

    ??

  • Anonymous

    anne ithellam ellorukkum solli kodungo

  • Anonymous

    நல்ல சரளமான எழுத்து நடை உங்களுக்கு இருக்கு. காமெடியாவும் எழுதுறீங்க. நல்லா இருக்குது படிக்க. ஆனா ஏன் சின்ன சின்னதாவே எழுதுறிங்க?

    பெரிசா எப்படி எழுதுறதுன்னு தெரியலைன்ன வலையிலே உண்மைத் தமிழன்னு ஒருத்தர் இருக்காரு. அவருகிட்ட ஆலோசனை கேளுங்களேன்.

  • DataEntry

    ஆலோசனைக்கு நன்றி அநாநி.

    என்னைய வெச்சு காமெடி கீமெடி பண்ணலயே?

  • Anonymous

    என்னிடம் பேபால் கணக்கே கிடையாது. ஆனால் எனக்கு இப்படி ஒரு மின்னஞ்சல் வந்தது. என்னவென்று புரியாததால் அப்படியே விட்டுவிட்டேன். இப்போது தான் புரிகிறது. அடப்பாவிகளா, ஆட்டய போடப் பாத்தானுங்களா?

Post a Comment

பின்னூட்டமிடும் போது உங்கள் பின்னூட்டத் தகவல்களை பொதுவில் வெளியிட வேண்டாம் என்றால் அதை முதல் வரியிலேயே, "பிரசுரத்திற்கு இல்லை" என்று தெரியப்படுத்திவிட்டு பின்னூட்டமிடவும்.