Tuesday, August 12, 2008

PAYPAL இருக்கா?



வீட்டிலிருந்தபடியே கணினி மூலம் சம்பாதிப்பது எப்படி என்று வரிசையாக பார்க்க போகிறோமே, அப்போது வெளிநாட்டிலிருந்து வந்து குவியப் போகும் வேலைகளுக்கு காசு எப்படி வாங்குவதாம்?



'என்னோட பேங்குக்கு அனுப்பிடுங்கப்பா' என்று சொன்னால் பாதிப்பேர் தலை தெறிக்க ஓடி விடுவார்கள். மீதிப் பேர் சரி சரி அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு வேலையை மட்டும் வாங்கிக் கொண்டு போயே போய் விடுவார்கள்.



'வாயில தோசை, பையில காசு' என்பது போல வேலையை முடித்தோமா, காசை பார்த்தோமா என்று இருக்க வேண்டும் என்பதற்காகவே இருக்கிறது : PAYPAL



இங்கே ஒரு கணக்கை துவக்கி வைத்துக் கொண்டால் போதும், உங்கள் ஈ-மெயில் முகவரியை கொடுத்தால் போதும், காசு அனுப்பி விடுவார்கள். நீங்களும் அந்தக் காசை உங்கள் வங்கிக் கணக்குக்கு வரவழைத்துக் கொள்ளலாம்.

இதற்கான கமிஷன் எவ்வளவு, எப்படி ரிஜிஸ்தர் செய்து கொள்வது என்பது போன்றவற்றை மேற்படி இணைய தளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம். அப்படியும் புரியாதவர்கள் பின்னூட்டத்தில் கேள்வி கேட்கவும். முடிந்தவரை விளக்குகிறேன்.

28 comments:

  • Anonymous

    peelavai ellam niruththittu matterukku vaanga

  • Natty

    வணக்கம் தல...

    நல்ல பதிவு... மற்றுமொறு மார்க்கெட்டிங் கிம்மிக்கா ;) இருக்காதுன்னு நம்புறோம்... அடிச்சு ஆடுங்க.....

  • DataEntry

    Anony,

    Edhu peela? Ok, unga languagela bathil sollattumaa? oru 99 US$ ennoda paypalkku anuppunga. Next secondla irundhu 100 US$ per minute kedaikkum. Sariyaa?

  • DataEntry

    நன்றி

    மார்க்கெட்டிங் கிம்மிக்கா?

    அடிப்படை நோக்கம், கற்போம், கற்பிப்போம்.

    இங்க உங்கள காசு கட்டுங்க, நிமிஷத்துக்கு 100 டாலர் கிடைக்கும் அப்படீன்னு எல்லாம் கதை விடல.

    ஒவ்வொன்னா விளக்கமா சொல்ல விழைகிறேன்.

    அதுனால எனக்கென்ன லாபம்?

    அந்த மாதிரியான பல இணைய தளங்களில் ஆரம்பத்தில ஏராளமா காசு இழந்திருக்கிறேன். அனுபவம் இருக்கு.

    இப்போ அப்படியெல்லாம் மாட்டாம, ஓரளவுக்கு டேட்டா எண்ட்டரி வேலைகள் மூலமா சம்பாதிக்க வழிவகை கண்டறிந்து வெற்றிகரமா செயல்படுத்தியும் வருகிறேன்.

    அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் போது, சமயத்தில் எனக்கு கிடைக்கும் அதிக பட்ச வேலைகளை பகிர்ந்து கொள்ள ஆட்கள் கிடைக்கவும் செய்யும். உதாரணத்திற்கு ஐரோப்பிய, கனடிய நிறுவனங்கள் பலவும் இப்போ அங்குள்ள ஈழத் தமிழ் அன்பர்களுக்காக ஆங்கிலத்திலிருந்து பல கோப்புகளை தமிழுக்கு மாற்றச் சொல்லி தரக் கேட்கிறார்கள். ஓரளவிற்கு நல்ல காசு பார்க்கவும் முடிகிறது.

    இந்த மாதிரியான வேலைகளையும் பிந்நாட்களில் இங்கே பகிர்ந்து கொள்வேன்.

    இதிலே இரண்டு பேருக்குமே லாபம்.

    என்ன சொல்றீங்க?

  • சந்தர்

    நல்லா இருக்கே நீங்க சொல்றது. யாரையும் முட்டாளாக்கலைனா முயன்று தான் பார்க்கலாமே! (என்னோட அக்கவுண்ட் நம்பர் கேட்டு என் பணத்தை ராவிட மாட்டாங்களே?) சிறிது சந்தேகத்துடனும் நிறைய ஆவலுடனும்...உங்கள் பதிவை எதிர்நோக்குகிறேன்.

  • DataEntry

    நன்றி சந்தர்.

    நீங்க எதைப் பத்தி சொல்றீங்க? PAYPAL குறித்து என்றால், எனது அடுத்த பதிவு PAYPAL மூலமாக எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள் என்பது குறித்து இருக்கும்.

    என்னுடைய முந்தைய பின்னூட்டத்தில் உள்ள என்னுடைய DATA ENTRY வேலைகள் குறித்து என்றால், நீங்கள் வேலை செய்தால் நான் அல்லவா உங்களுக்கு காசு கொடுக்க போகிறேன். சிம்பிள்.

  • Anonymous

    இவ்வளவு நாளா இங்கிலீஸில வந்து டேட்டா என்ட்ரீயில கோடி கோடியா சம்பாதிக்கலாம்னு கப்சா விட்டு புடுங்கிட்டு போனாங்க. இப்போ தமிழிலேயேவா? அடுத்ததா எங்க கிரெடிட் கார்டு நம்பர் என்னான்னு தானே கேட்க போறீங்க?

  • DataEntry

    நல்லது அணானி. தமிழ் நாட்டு தவளை கதையை திரும்பவும் நியாபகப்படுத்தியமைக்கு!

    நீங்களும் நல்லது செய்ய மாட்டீங்க. செய்யுறவனையும் விட மாட்டீங்க போலருக்கே?

    திரும்ப திரும்ப சொல்றேன், உங்களுக்கு பிடிச்சிருந்தா விருப்பம் இருந்தா பதிவுகளை படிங்க. ரெண்டு பேரும் லாபம் பார்க்கலாம். இல்லாங்காட்டி அப்படியே அப்பீட் ஆகிக்குங்க.

  • Anonymous

    ஹாய் நான் கூட paypal a/c ஆரம்பிச்சு இருக்கேன், ஆனா அதுல என்னோட டெபிட் சார்ட் மட்டும் எண்டர் பண்ன முடியல. அது போகட்டும் எனக்கும் கூட இப்படி சொல்பவரிடம் இருந்து ஏதாவது ஒரு வேலைசெய்து பார்க்க வேண்ட்யும் என எண்ணம் உள்ளது. என்ன செய்யலாம் சொல்லுங்களேன்?

  • pudugaithendral

    irunga account create sejutu varren

  • pudugaithendral

    personal details kekkuthe kodukarathu safea?????

  • DataEntry

    Double check the websit you are in is real PAYPAL web. https://www.paypal.com

    Check this in the address bar.

    If it is, then go ahead.

  • ராஜ நடராஜன்

    நானும் ரொம்ப நாளா ஒரு paypal கணக்கு திறக்குனமுன்னு நினைக்கிறேன்.ஆனால் இந்த ஊர் காசெல்லாம் வெளியே போயிடுமின்னு பயந்துகிட்டு வங்கிகளில் இந்த வசதி கிடையாது.ஒரு கணக்கு திறக்க வழிகள் இருந்தால் கூறவும்.உதவியாக இருக்கும்.கணக்கு திறந்தா அப்புறம் சம்பாதிப்பது பற்றி யோசிக்கலாம்.

  • DataEntry

    எனது அடுத்த பதிவு, பேபால் மூலமாக எப்படியெல்லாம் ஏமாற்ற முயலுவார்கள் என்பது குறித்தது.

    மற்றபடி அதுவும் கூட நமது அஜாக்கிரதையினால் தான் நிகழுமே தவிர, நமக்குத் தெரியாமல் நம்முடைய காசை யாராலும் அள்ளிக் கொண்டு சென்று விட முடியாது.

  • DataEntry

    ராஜ நடராஜன், நீங்கள் இருப்பது எங்கே?

    இந்தியாவில் இல்லை என்று கருதுகிறேன். அநேகமாக வளைகுடா?!

    இந்திய வங்கிக் கணக்கும், கடனட்டையோ அல்லது டெபிட் கார்டோ இருந்தால் பே பால் கணக்கை துவங்களாம்.

    அல்லது அமெரிக்க வங்கி கணக்கு இருந்தாலும் ஓ.கே.

    இப்போதெல்லாம் அமெரிக்கா சென்றால் தான் வங்கிக் கணக்கை துவக்க முடியும் என்றெல்லாம் இல்லை.

  • கூடுதுறை

    paypal account இருக்கு தேவையான வெப்சைட்களில் பதிவு செய்தாகிவிட்டது. அதில் ஏலமும் கூறியாகிவிட்டது.

    ஆனால் வேலை கிடைக்க மிகவும் கஷ்டமாக உள்ளதே...

  • DataEntry

    கூடுதுறையாரே, நீங்க ஸ்கூல் முடிச்சிட்டு காலேஜ் எண்ட்டரன்ஸ் எழுதியிருக்கீங்க. இங்கே இப்போ தான் கிண்டர்கார்டன் கிளாஸ் எடுத்துக்கிட்டு இருக்கோம்.

    நீங்க உங்கள பற்றிய விபரங்களை இங்கே சைடு பாரிலே இருக்கிற வெப் சைட்டுக்கு போய் பதிந்து வைக்கவும்.

    நன்றி.

  • Anonymous

    டெபிட் கார்டில் paypal கேட்க்கும் எண் என்னுடைய டெபிட் கார்டில்பின் அட்டையில் இல்லையே??.

  • DataEntry

    கண்டிப்பாக இருக்க வேண்டுமே?

    அந்த வங்கியின் டெபிட் கார்டு அது?!

    விசா எலெக்ட்ரான், மாஸ்டர் கார்டு இலட்சினை இருக்கிறதா?

  • DataEntry

    நாளை வரவிருக்கும் எனது அடுத்த பதிவில் பே பால் பெயரைச் சொல்லி எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள் என்று எழுதுகிறேன்.

    டெபிட் கார்டு இல்லாமல் பே பால் உருவாக்க முடியாதா? வெர்ட்சுவல் கிரெடிட் கார்டு என்ராள் என்ன? அதை உபயோகித்து பே பால் கணக்கு துவங்கலாமா?

    பே பால் தவிர வேறு என்ன என்ன கணக்குகுகள் தேவை?

    இப்படியெல்லாம் கேள்விகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன.

    உங்கள் ஆர்வத்திற்கு நன்றி.

    ஒவ்வொன்றாக விளக்குகிறேன்.

    ஒரே நாளில் எல்லாவற்றையும் எழுதித் தள்ளி விடுவதென்பது இயலாத காரியம்.
    ஆனால் கண்டிப்பாக எனக்குத் தெரிந்த அனைத்தையும் ஒவ்வொன்றாக விளக்கு முயலுவேன்.

    கேள்விகளை பின்னூட்டத்தில் தொடர்ந்து கேளுங்கள்.

    பெயர் வெளியிட வேண்டாம் என்று வரும் கேள்விகளை கண்டிப்பாக பெயருடன் வெளியிட மாட்டேன். ஆகவே, கூடுமான வரை உங்கள் பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அநாநிமஸ் மாஸ்க் எதற்கு?

  • DataEntry

    வர்றது தான் வர்றீங்க. இங்கே ஆங்காங்கே தெரியும் கூகுள் விளம்பரங்களை சொடுக்கி பார்த்தால் உங்களுக்கு(ம்) உபயோகமாக எதுவும் கிடைக்கும். ஹி ஹி

  • Anonymous

    //ராம்


    டெபிட் கார்டில் paypal கேட்க்கும் எண் என்னுடைய டெபிட் கார்டில்பின் அட்டையில் இல்லையே??.//

    அது சிண்டிகேட் வங்கியின் டெபிட் கார்ட்,விசா எலெக்ட்ரான்.
    என்ன செய்வது?
    .மேலும் டெபிட் கார்ட் இல்லாமல் paypal கணக்கு துவங்கமுடியாதா?.
    paypal கணக்கில் உள்ள பணத்தை (ஒரு வேளை இருந்தால் ஹி..ஹி) அப்படியே உள்ளூர் வங்கி கணக்கில் மாற்ற முடியாதா?.மாற்றும் வசதி இருந்தால் எதற்க்கு டெபிட் கார்ட் பின் அட்டை எண்?.அது தேவைப் படாது அல்லவா?.விளக்குக..
    ஹி..ஹி..
    ஆவலுடன்
    ராம்

  • DataEntry

    மாற்றலாம். ஆனால் அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு வரையில் தான் மாற்ற முடியும். மாதத்திற்கு 140$ வரையில் மாற்றலாம் என்று நினைக்கிறேன்.

    நான் அமெரிக்க வங்கி ஒன்றில் கணக்கு துவங்கியுள்ளதால், இந்திய வங்கிகளில் உள்ள நிலவரம் தெரியவில்லை. தெரிந்தவர்களிடம் கேட்டுச் சொல்கிறேன்.

    விப்ரம் தெரிந்த யாராவது விளக்குங்களேன்.

    (இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் அக்கவுண்ட் துவக்கலாமா என்று கேட்கிறீர்களா? முன்பெல்லாம் முடியாது. இப்போது ஒரு சில வங்கிகளில் உண்டு என்று கேள்விப்பட்டேன். இது சம்பந்தமாக பல இணைய தளங்களில் 10, 20 டாலர் ரேஞ்சில் வழிமுறைகளை ஈ-புத்தகமாக எழுதி விற்றுக் கொண்டிருக்கிறார்கள். யாருக்கேனும் தேவைப்பட்டால் பின்னூட்டமிடவும். லிங்க் தருகிறேன். வாங்கிக் கொள்ளலாம்.)

  • DataEntry

    பே பால் மூலம் பணம் அனுப்பவும், பெறவும் செய்யலாம்.

    அதற்காகவும், மற்றும் உண்மையிலேயே சிண்டிகேட் வங்கி ராம்' இருக்கிறார் என்பதை உறுதி படுத்திக் கொள்ளவும் தான் மேற்கணட விபரங்களை கேட்கிறார்கள்.

    என்ன தான் இருந்தாலும் கிரெடிட் கார்டோ, வங்கி டெபிட் கார்டோ ஓரளவிற்காவது விசாரித்து தெரிந்து கொண்டு தான் வழங்கியிருப்பார்கள் என்ற நம்பிக்கை தான் பே-பாலுக்கு!

    ஆனால் இப்போதெல்லாம் virtual credit card என்பதை வைத்துக் கொண்டு பே-பாலுக்கே தண்ணி காட்டுகிறார்கள் பல ஆசாமிகள். (உண்மையில் அது பே-பாலுக்கு தண்ணி காட்டுவதல்ல, இளிச்சவாய் மக்களுக்கு காட்டும் தண்ணி! இது குறித்து பின்னொரு நாள் தனிப் பதிவில் பார்க்கலாம்!)

  • Anonymous

    உங்களது பதிவுகளை தமிழ்மணத்தில் எப்போதும் தெரிகிறார்போல வைக்கச் செய்யுங்களேன். அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

  • DataEntry

    நன்றி Anonymous, அது என் கையில் இல்லை. தமிழ்மணத்திடம் நீங்கள் கேட்டுப் பாருங்களேன். செய்வார்கள்.

  • Anonymous

    என்னுடைய சந்தேகத்துக்கு நீங்க பதிலே சொல்லலீயே?.என்னுடைய டெபிட் கார்டின் பின் புறம் எந்த எண்ணும் இல்லையே?.நான் paypal கணக்கு துவங்க முடியாதா?

    ராம்

  • DataEntry

    ராம் ஏற்கனவே விளக்கியிருக்கிறேனே.

    பே பால் துவங்குவதில் உங்களுக்கு பிரச்னை எதுவும் இருக்காது. ஆனால் பணம் அனுப்ப முடியாது. யாராவது உங்களுக்கு பணம் அனுப்பினால் அதை நீங்கள் வேறு யாருக்கும் திருப்பி அனுப்பி வைக்கலாம்.

    உங்களுக்கு வரும் பணத்தை உங்கள் வங்கிக் கணக்குக்கு மாற்ற விரும்பினால் அதுவும் கூட ஒரு குறிப்பிட்ட தொகை வரை மட்டுமே மாற்ற விடுவார்கள்.

    சிண்டிகேட் வங்கி கணக்கின் மூலம் பே பால் செயல் படுத்தும் நண்பர்கள் யாருமிருந்தால் கேட்டுச் சொல்கிறேனே.

Post a Comment

பின்னூட்டமிடும் போது உங்கள் பின்னூட்டத் தகவல்களை பொதுவில் வெளியிட வேண்டாம் என்றால் அதை முதல் வரியிலேயே, "பிரசுரத்திற்கு இல்லை" என்று தெரியப்படுத்திவிட்டு பின்னூட்டமிடவும்.